
(75) திரைக்கதை எனும் கலை!
கிராபிக்ஸ் மிகச்சிறப்பாக இருந்ததால் மட்டுமே இந்த திரைப்படம் வெற்றியடைந்தது என எந்தப் படத்தையும் சொல்லிவிட முடியாது. இருபத்துநாலு தொழில்நுட்பப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் போட்டி போட்டு இணைந்து பணியாற்ற வேண்டும். அதனைச் சரியான கலவை போட்டு இயக்குநர் புதுமையாகத் தன் பணியைச் செய்யவேண்டும். எது எப்படியிருந்தாலும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு முதுகெலும்பே திரைக்கதைதான். உலக அளவில் நல்ல திரைக்கதாசிரியர்கள் கோடிக்கணக்கில் ஊதியம் பெறுகிறார்கள். தமிழ்த்திரையுலகில் திரைக்கதாசிரியர்கள் என்ற இனம் அழிந்துகொண்டே போகிறது. இயக்குநர்களே கதை, திரைக்கதை, வசனம் அனைத்தையும் எழுதுகிறார்கள். அண்மையில் நான் பலமொழிப் படங்களை ஓ.டி.டி.யில் பார்த்திருக்கிறேன். மலையாளம், மராத்தி, வங்காள படங்கள்... நல்ல திரைக்கதை அமைப்பில் வரு கின்றன.
அண்மையில் "டிராகன்' தமிழ்ப் படம் பார்த்தேன். திரைக்கதை சிறப்பாக இருந்தது. படத்தின் பெருவெற் றிக்கு கதை, திரைக்கதை ஒரு முக்கியமான காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. திருப்பங்கள் சுவையாக ரசிக்கும்படி இருந்தது. பார்க்கின்றவர்கள் அடுத்து என்னவாக இருக்கும் என ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. Sustaining interest... Super Characterisation.... astonishing performance by hero... rich making.
"சூப்பரா தொடர்ந்து படித்து மெடல் வாங்கிய நாயகன், மன உறுதியோடு தன்னுடன் தோழமையுடன் பழகிவந்த நாயகியிடம் தன் காதலை புரப்போஸ் செய்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். "நான் எப்படா உன்னைக் காதலிக்கிறதா சொன்னேன்?'' என நாயகி கேட்க, "நல்லா படிச்சு, ஒழுங்கா நட் போடு பழகி மெடல் வாங்கி, அதன்பின் என் காதலை சொல்லவேண்டும் என நினைத்து காத்திருந்தேன்'' எனச் சொல்ல... "உன் னை மாதிரி நல்ல பசங்களை பெண் களுக்குப் பிடிக் கும்னு யார்டா சொன்னாங்க. கொஞ்சம் அப்படி, ம்ண்ள்ஸ்ரீட்ண்ங்ஸ்ர்ன்ள்ஆ இருக்கிற பசங்களைத்தான் பல பெண்களுக்குப் பிடிக்கும்'' எனச் சொல்லி அவனை நிராகரிக்க... அவன் வாழ்க்கையை அவளுக்காக மாற்றி வாழ ஆரம்பிக்கிறான். காட்சிகள் சற்று புதுமையாக அமைக்கப்பட்ட நல்ல திரைக்கதை. "டிராகன்' வெற்றிக் குரிய படமே.

"மின்சாரக் கனவு' கதை, திரைக்கதை, வசனம் எழுதும்போது எனக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது. "காதலை தானே சொல்லி தோல்வியடைய விரும் பாத நாயகன், கன்னியாஸ்திரி ஆக விரும்பும் தன் சிறு வயது காதலியிடம் காதலைச் சொல்ல ஒரு ஸ்ரீர்ய்ஸ்ண்ய்ஸ்ரீங்ழ் (நம்பவைக்கக்கூடிய) ஒருவனைத் தேடுகிறான். அது பிரபுதேவா...! இவன் காதலை சொல்லப்போன அவனை, நாயகி காதலிக்க ஆரம்பிக்கிறாள்.'
"அழகான, வெளிநாட்டில் படித்த, தன் சிறுவயது காதலனை விட்டு, காதலைச் சொல்லப்போன முடிதிருத்தும் தொழிலாளியான பிரபுதேவாவை நாயகி ஏன் விரும்பினாள்?' என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் கிடை யாது. கண்ட இடத்திலே முளைக் கக்கூடியது காதலும், கள்ளிச் செடியும்தான்.
இன்னொரு படம் "மதுர கீதம்'. ஒரு லேடி டாக்டரிடம் ஒரு இளைஞன் வருகிறான். "எனக்கு இரவில் தூக்கமே வரமாட்டேங்குது. ஏதாவது தூக்கமாத்திரை தாருங்கள்'' எனக் கேட்கிறான்.
"ஏன் தூக்கம் வரல்லே... ஏதாவது காதல் தோல்வியா?'' என டாக்டர் கேட்க...
"அதெல்லாம் இல்லே டாக்டர். பள்ளியிலே படிக்கும்போது நான் நல்லா பாடுவேன். கூடப் படிச்சவங்க, சொந்தக்காரங்க, நண்பருங்க எல்லாரும் "நீ நல்லா பாடுறே, சினிமாவிலே சேர்ந்தேன்னா ஓஹோன்னு வரலாம்'னு சொன்னாங்க. நம்பி நானும் சென்னைக்கு வந்து நாயா, பேயா வாய்ப்புத் தேடி அலைஞ்சேன்... வாய்ப்பே கிடைக்கலே. ஊருக்குத் திரும்பிப் போகவும் மனசில்லே'' என தன் சோகக் கதையைச் சொல்ல...
அவள், "தினமும் ஒரு மாத்திரை மட்டுமே சாப்பிடணும்''னு சொல்லி ஒரு வாரத்துக்கான மாத்திரையைக் கொடுக்க...
அவன், "டாக்டரம்மா ஒரு மாசத்துக்கு மொத்தமா தர முடியுமா?'' எனக் கேட்க...
அவள் சற்றுத் தயங்கியபடி "தர்றேன்... ஆனா தப்பா பயன்படுத்தி ஆபத்து வந்தால், நான் கம்பி எண்ணணும், களி திங்கணும். அந்த நிலையை எனக்கு ஏற்படுத்திடாதீங்க'' எனச் சொல்லி, மாத்திரைகள் கொடுக்கிறாள்.

அவன் இரவு ஒரு பாட்டை தன் கடைசிப் பாடலாகப் பாடியபடி மாத்திரைகளை முழுங்கிவிட்டு மொட்டை மாடியில் படுக்கிறான்... தான் மரணித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு. ஆனால் காலையில் கண் முழிக்கிறான். இரவு அவன் பாடிய பாடல், பெண் குரலில் கேட்கிறது. அவன் குழப்பமடைகிறான். "இதென்ன சொர்க்கமா? நரகமா? இங்கே யாரு என் பாட்டை பாடுறது?''
அப்போது பாடியபடி லேடி டாக்டர், அவன் முன் வர... "என்னை ஏமாத்திட்டீங்களா டாக்டர்...?''
"உங்க பேச்சை வச்சு தூக்க மாத்திரையை குடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்?'' எனக் கேட்டவள்... "ஏங்க? உங்க குரல் நல்லாவே இருக்கே... ஏன் வாய்ப்புக் கிடைக்கலே? வாய்ப்புக்கு அலைஞ்சிருப்பீங் களோ?'' என கிண்டல் செய்த தோடு, அவன் பாடல் பயிற்சி பெற, நல்ல சாப் பாடு, நல்ல உடை, தங்க... நல்ல அறை -இப்படி அனைத்தையும் செய்துகொடுக்கிறாள். பின்னர் நல்ல இசையமைப்பாளரிடம் அவனை அறிமுகம் செய்துவைத்து முதல் வாய்ப்பும் பெற்றுத் தருகிறாள்.
அவன் விரைவில் பிரபல பாடகனாகிறான். டாக்டரின் காதலை அவன் புரிந்துகொள்ளா தது போல் நடித்து, தன் தயாரிப் பாளர் மகளை காதலிக்கிறான். இதன் திரைக்கதை, வசனத்துக்கு தமிழக அரசு எனக்குப் பரிசளித்தது.
வெற்றி என்பது கடுமையான உழைப்பின் பின்னால் நமக்கு வருவது. வெற்றிக்கான உழைப்பை விடாமல் நாம் விதைத்துக் கொண்டே போனால்... புகழ் தானாகவே நம்மைத் தேடிவரும்.
பொதுவாக திரையுலகில் கதை -திரைக்கதை ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் உச்சம் தொடுவார்கள். பின்னர் படிப் படியாக இறங்குமுகம் காண்பார்கள். அதற்குக் காரணம்... முதலில் அவர்கள் முதல்படியைத் தாண்ட கடுமையாக உழைப்பார்கள். வசதிகள் வந்த பின்னால், குடும்ப சுமை சற்று அதிகமானால் வயது, உடல்நிலை, சோர்வு, சோம்பேறித்தனம் காரணமாக உழைக்க முடியாத நிலை வரும்போது... தடுமாற்றம் வரும். பல புதியவர்கள் வருகை, உங்களிடம் உதவியாளர்களாக இருந்தவர்களின் வளர்ச்சி, இவை இயற்கை. அதைக்கண்டு மிரண்டுவிடாமல் உறுதியோடு உழைப்பது அவசியம்.
எம்.ஜி.ஆர். அடிக்கடி சொல்வது இதுதான்...! "வாழ்க்கையில் எந்த வயதில் அதிர்ஷ்ட வாய்ப்பு வருமென்று தெரியாது. ஒருவேளை அது உன் எழுபது வயதில் கூட வரலாம். அப்போது உனக்கு ஆரோக்கியம் சரியில்லையென்றால், வந்த அதிர்ஷ்டத்தை உன்னால் அனுபவிக்க முடியாமல் போய்விடும். ஆகவே எப்போதும் உன் உடலையும், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.''
அவருக்கே நாற்பது வயதுக்கு மேல்தான் பெரும் வளர்ச்சிகள் வந்தன. அவர் நடித்த கடைசிப் படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.' அதிலும் அவர் செம ஃபிட்டா காட்சி தருவார்.
தற்போது நான் "காவி ஆவி நடுவுல தேவி' என்ற கதையை எழுதியுள்ளேன். என் அடுத்த கதை "தேன் நிலவிலே மனைவி எங்கே?' கதையை மிகப்புதுமையாகவும், நகைச்சுவை யோடும் எழுதியுள்ளேன். இந்தப் போராட்ட குணம் எனக்குள் ஏற்பட்டதுக்கு காரணம் எம்.ஜி.ஆர்.தான். அவர் சொன்னது மட்டுமல்ல... தினமும் பல நாட்டுப் படங்களைப் பார்க்கிறேன். பல நூல்களைப் படிக்கிறேன். இந்தத் தொழிலில் முன்னுக்கு வரத்துடிக்கும் படித்த பல இளைஞர்களோடு பழகுகிறேன். என்னால் அவர்கள் உயர்வார்கள். அவர்களிடம் நான் இன்றைய சினிமாவை கற்றுக் கொண்டேன்.
எனது அடுத்த படம் பற்றி அடுத்த இதழில்...!
(திரை விரியும்)

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-03/ck-t_2.jpg)